எந்தன் சுவாசம் உந்தன் உயிரோடு

அட கள்வனே என் மனதை திருடுவதாக
நினைத்து வாழ்க்கையை திருடிவிட்டாயே…!
உன்னை கண்டவுடன் பெண்மை மறந்தேன்.
உந்தன் பந்தத்தில் திழைத்து
உயிர் வாழ வேண்டுமென, உதிரத்தால்
இணைந்த உறவுகளை தொலைத்தேன்.
உந்தன் கனநேர பிரிவையே தாங்காது
உள்ளம் சோர்ந்து போகுமே
ஆனால் இப்போது உன்னை பிரிந்த
உலகத்தில் பிறவிப்பலனையே இழந்தேனே…!
இருப்பினும் உயிர்வாழ துடிக்கிறேன்
உந்தன் கல்லறைத் தேடி….!