உன்னுடன்
உன்னுடன்
""""""""""""""""
அண்மையில் நடந்த பள்ளிவிழாவில்!
வெள்ளைசேலையில்
வந்த என்னை பார்த்து
நீ கேட்டுருந்தாய்"""
நான் உயிருடன் இருக்கும்போது
எப்போ விதவையானாய்?
இந்த ஒற்றை கேள்வியில்
உன் நினைவுகளுடன்
வாழ்ந்துகொண்டுருக்கிறேன்
சுமங்கலியாக!!!
லாஷிகா