வெற்றி நிச்சயம்

வெற்றி நிச்சயம்
கானக் கருங்குயிலின்
இசைக்கேட்டு உணர்ந்தேன்;
தோல்வி நிச்சயமென்று,
இன்னிசை கொடுத்த
அவனால் இனிமையுடன் பாட
குரலிசை தரவில்லை என்பதால்…!

தொடுவான மேகத்தின்
துன்பம் கேட்டுணர்ந்தேன்;
தோல்வி நிச்சயமென்று,
வேண்டா வடிவம் கொடுத்த
அவனால் இன்பத்துடன் காண
வேண்டிய கண்ணீர் தரவில்லை என்பதால்…!

அழும் மழலையின்
மனதைக் கேட்டுணர்ந்தேன்;
தோல்வி நிச்சயமென்று,
பிறப்பினைக் கொடுத்த
அவனால் இறப்பின்றி வாழ
ஆயுள் தரவில்லை என்பதால்…!

கதறும் மனிதனின்
கதைக் கேட்டுணர்ந்தேன்;
தோல்வி நிச்சயமென்று,
உணர்ச்சிகளைக் கொடுத்த
அவனால் உண்மையுடன் வளர
சூழ்நிலை தரவில்லை என்பதால்…!

படைத்த இறைவனிடமே
நீதீக் கேட்டுணர்ந்தேன்;
தோல்வியின் வெற்றி நிச்சயமென்று,
நிறையில்லா உலகத்தைப் படைத்த
அவனால் குறையின்றி படைக்க
ஒரு நிமிடம் மறந்தான் என்பதால்….!

எழுதியவர் : செல்வம் (19-May-15, 8:18 am)
சேர்த்தது : செல்வம்
Tanglish : vettri nichayam
பார்வை : 197

மேலே