ஒளியின் கவிகள்

திறக்கவிருக்கும்
அறையில்
எனது கவிதைகள்
உறைந்திருக்கின்றன!!

கவிதைகள்
உறைய தொடங்கிய‌
ஓர் நாளில் தான்
தாளிடப்பட்டது
எனது அறை!!

திறக்கத்தான்
வேண்டுமா!
கவன‌மாயிருங்கள்..

ஒளியில்
கவிகள் உருகும்
ஓர் தருணத்தில்!
ஆயிரம் புத்தர்களும்
வெள்ளைப்புறாக்களும்
சண்டையிடக்கூடும்!!

எதோ
ஓர் மூலையில்
களைத்தூக்கத்தில்
அவர்கள்
படுத்திருக்க!!

கற்பை
பறிகொடுத்தவள்
கதறிக்கொண்டிருக்கலாம்
மறுமூலையில்!!

திறக்கத்தான்
வேண்டுமா???
உங்கள்
நிழல்களும்
ஓடித்திரியலாம்
கவலையற்று
ஓர் மங்கையோடு..

கவனமாயிருங்கள்!

எழுதியவர் : புலவூரான் ரிஷி (19-May-15, 12:14 am)
பார்வை : 73

மேலே