வைகறை

(வைகறையின் நிகழ்வை கவிதையாக்கும் சிறுமுயற்சி)



கம்பன் கவியும் தோற்குமே
பறக்கும் பறவைகளின் இசைக்கேட்டு...!
மங்கையின் விழியும் திறக்குமே
சேவற் கூறும் மொழிக்கேட்டு...!

குழந்தை அழும் பசிக்கண்டு-பால்
கறந்திட சென்றாள் பசுக்கண்டு;
உழவனும் எழுந்தான் இதைக்கண்டு-பல்
துலக்கிட சென்றான் வேம்பு கண்டு;

அண்ணனும் அலறி எழுந்தான்
தேர்வின் பயம் கொண்டு;
எறும்புகளும் சாரையிட்டன அன்னையின்
பச்சரிசி கோலம் கொண்டு;

வெள்ளி மீனும் துயிலெழும் திங்கள்
மறையும் அழகைப் பார்த்து....!
ஞாயிறும் பிறக்கும் திங்களுக்குப் பின்
மருத வைகறையைப் பார்த்து...!

எழுதியவர் : செல்வம் (19-May-15, 7:28 am)
சேர்த்தது : செல்வம்
பார்வை : 142

சிறந்த கவிதைகள்

மேலே