வற்றலாய்

என்ன புடமிட்டுத் தேடினாலும்
என் குடம் நிறையப் போவதில்லை!
நீச்சலிட்டு விளையாடிய ஏரியில்
கூச்சலிட்டு குமுறுகிறேன் நீருக்காக!
கரை சேர காத்திருக்கிறேன்
தரை சேர மனமில்லாத மழையே!
நெடுந்தூரம் நடந்தே நொந்துவிட்டேன்
கடுங்கோபம் மண்மேல் ஏனோ...?
வெயிற்காலத்தில் அம்மா இடும்
வற்றலாய் இவ்வேறி ஆனபின்னும்
வற்றாத அருட்சுனையாய்
ஊற்றெடுக்க உளம் மாறாததேனோ...?
வாடி கருகும் பயிர் மட்டுமல்ல
வாடி வதங்கும் விலங்குகள் கூட
நாடி உனை தஞ்சமடையுமே
தேடித் தேடி தரும்
வள்ளல் கரமொன்று
ஓடி ஒளிந்திட்டால்
மண்ணுயிரெல்லாம்
மாண்டு மறையாதோ...?
கூடியே வேண்டுகிறோம் இறைவா!
மடியை பூமித்தாய் மடியை நிறைத்திடு!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (19-May-15, 1:50 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 68

மேலே