வெகுநாளு முன்னால‌ கடுதாசி போட்டேனே

=வெகுநாளு முன்னால‌
===கடுதாசி போட்டேனே
======உனைவந்து சேந்துச்சா
=========சொல் மழையே!!!

=கடுதாசி கண்டதுமே
===கண்ணீரும் விட்டேனே
======உ(ம்)மனசு அழுததுவோ
=========ஏ(ம்) மரமே?

=பலநூறு வருசங்களா
===பதவீசா வாழ்ந்திருந்தேன்
======படுபாவி ஒருத்தனாலே
=========வாழ் விழந்தேன்..

=சேதியென்னை எட்டியதும்
===மேகத்துடனே கட்டியழுதேன்
======விரைந்தேயுனை பார்த்திடவே
=========நான் விழுந்தேன்..

‍=கடுதாசியுனை எட்டுமுன்னே
===துடிதுடித்தே வெட்டப்பட்டு
======கட்டில்கதவா மாறிட்டேனே
=========இப்போ மூச்சுமில்லே..

=அடியாத்தி மரத்தோழி
===மனுசயப்பய மோசந்தான்
======முடிஞ்சவரை பிழிஞ்சிடுவான்
=========உபயோகித்துப்பின் கடாசிடுவான்..

=அதுதானே தெரிஞ்சகதை
===அகிலஉலகும் புரிஞ்சகதை
======மூச்சுக்காத்த சுத்திகரிச்சேன்
=========மூச்சநிறுத்த கத்தியெடுத்தான்..

=மனுசனாநான் மாறிடவா
===பெய்யாமத்தான் போயிடவா
======கொட்டித்தீத்து அழிச்சிடவா
========= நானென்ன செய்ய?

=அந்தபுத்தி நமக்கெதுக்கு
===சொந்தபுத்தி நெறஞ்சிருக்கு
======எப்பவும்போல உதவிடு
=========எல்லோரும்வாழ்த்த‌ உயர்ந்திடு...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-May-15, 12:24 am)
பார்வை : 436

மேலே