ஒளியும் பார்வையும்

நேரான
பாதைகளில்
பயணிக்கும்
ஒளி எப்போதும்
உண்மை பேசிச்
செல்கிறது.

எது எதுவாக
இருக்கிறதோ
அது அதுவாகப்
பார்வைக்குப்
புலப்படுகிறது
ஆனால்
எப்போதும் இது
சாத்தியமாவதில்லை ...

ஒளிக்கும்
பார்வைக்கும்
உள்ள புரிந்துணர்வு
ஒளி பயணிக்கும்
ஊடகம் சார்ந்தது.

விம்பங்கள்
இயல்பொத்து
இருப்பதால்
விளங்கிக் கொள்ளும்
அதே கண்கள்
நிழல்கள் தெளிவற்று
இருப்பதால் ஏற்றுக்
கொள்வதில்லை.

மாறாக அதே கண்கள்
கானலில் தோன்றும்
மாயத் தோற்றத்தை
உண்மை என
நினைத்துக்
கொள்கின்றன


இதை விளங்க வைக்க
முயன்று தோற்று
மீண்டும் மீண்டும்
உள் முகமாகவே
தெறித்துக் கொண்டிருக்கிறது
தொலைவில் காயும்
கத்திரி வெயிலில்
காய்ந்த ஒளி..

எழுதியவர் : உமை (18-May-15, 10:03 pm)
Tanglish : oliyum parvaium
பார்வை : 93

மேலே