என் தோழி

கல்லூரி தோழியே.....
தோழமையில் கலந்துவிட்டோம்.....
தோன்றியதெல்லாம் பகிர்ந்துவிட்டோம்....
தோழமையில் உன்னை பிரித்து கண்டதில்லை...
தோல்வியிலும் உன்னை துவண்டு கண்டதில்லை.....
வெற்றியை உன்னிடமிருந்தே
கற்றுக்கொள்ள வேண்டும்......
நான் செய்யும் பிழைகளையும்
எனக்காக பொறுத்துக்கொள்பவளும்
அதை திருத்துபவளும் நீ தான்....
சிகரத்தையும் சிட்டுக்குருவியினால்
அடைய முடியும்....
சிரிப்பையும் சோகத்தில்
வெளிப்படுத்த முடியும்.......என்பதை
உன்னிடமிருந்தே அறிந்தேன்.....
நாளடைவில் மறைய
நட்பு நதிவெள்ளம் இல்லை....
நாட்கள் சென்றாலும்
நாடித்துடிப்பு போல் நம்மோடு இருப்பது....
உனக்கு திருமணமானாலும்
எனக்கு திருமணமானாலும்
நம் நட்பையும் அதைப் போலவே
தொடருவோம்..........தொடரும் நட்பு