பசுமைப் போராளி
"இயற்கை ஆர்வலர்"
"சமூக சேவகி"
"பசுமை போராளி"
"பொதுநலத் தொண்டன்"
எல்லாம் நீதான்!
ஒற்றை விதையை
அலகால் கொத்தி சுமந்து
வீசிச் சென்று
பசுமைப் புரட்சி
சத்தம் இல்லாமல் செய்யும்
பறவையே உனக்கே இந்த
பட்டங்கள் பொருந்தும்!

