எல்லையில்லாத் தொல்லைகளுடன்

அத்தையும் மருமகளும்
திண்ணையில் உட்கார்ந்து
ஊர் வம்பு பேசிய காலம் போய்
இணையதளம் வாயிலாக
வம்பு பேசும் காலம் வந்தும்
பெண்களுக்கு எதிரான வன்முறை
மட்டும் குறையவில்லை!
வளர்ந்தே வந்திருக்கிறது!
அறிவியலுடன் அரக்கத்தனம்!
விஞ்ஞானத்துடன் வில்லங்கம்!
புதுமைகளுடன் பொறாமை!
தொழில்நுட்பங்களுடன் தொந்தரவு!
எல்லையில்லாத் தொல்லைகளுடன்
எதார்த்தமாக வாழ
எங்கள் பெண்களால் மட்டுமே முடியும்!
இத்தனையும் இருக்க
இணையதளத்தில் அரட்டையும் அடிப்போம்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (21-Apr-15, 1:56 pm)
பார்வை : 80

மேலே