கவிதை கேளுங்கள்
எதிர்ப்பட்ட
எறும்பொன்றை
நிறுத்தி
என்கவிதை
கேள் என்றேன்
நிற்க நேரமில்லை
வேண்டுமென்றால்
என் கூட வந்து
சொல் என்றது.
மண்டியிட்டுக் குனிந்து
கவிதையை கிசுகிசுத்தபடி
எறும்பின் பின்னால்
அறைக்குள் நான் ஊர்வது
வேடிக்கையாய் இருக்கிறது
மற்றவர்க்கு.
கவிதையைக்
கேட்க வைக்க
கவிஞன் படும்பாடு
யாருக்குத் தெரிகிறது?