உலகம் உன் கையினில் -Translation of IF by Rudyard Kipling

உன்னால் ....

புகழுரையும் .. இகழுரையும்
ஒன்றெனக் கொண்டிட முடிந்தால் ..

ஊரார் உன்னில் ஐயம் கொள்ளினும்
உன்னால் உன்னை நம்பிடவும் ஐயங்கள் ..
அனுமதிக்கவும் முடிந்தால் ..

காத்திருத்தலும் அதனால் சோர்வும்
அடைந்திடா பக்குவம் உனக்கு இருந்தால்..

வதந்திகளில் சிக்கினும்..அவற்றினுள்
நீ அமிழ்ந்து விடாதிருந்தால்..

வெறுக்கப் படினும்..வெறுப்புகள் நீ
காண்பிக்கா இதயம் இருந்தால் ..

நிரம்பவே நல்லவராய் .. மேதாவியாய்
காட்டிக்கொள்ள நீ முயலாது இருந்தால்..

****
கனாக் காணவும் ..அவற்றிற்கு அடிமையாய்
நீ ஆகாதிருக்கவும் .. முடியும் என்றால்..

சிந்திக்கவும் .. அவையே உனது இலட்சியங்கள்
என்றே முடித்துக் கொள்ளாதிருக்க முடிந்தால் ..

வீழ்வும் வாழ்வும் ஒன்றெனக் கொண்டு..
இரண்டையும் உன்னால் எதிர்கொள்ள முடிந்தால்..

உனது வாய்மை தனை மூடர்கள் வளைத்து
வலையினுள் நீ வீழினும்..அதை தாங்கிட முடிந்தால்..

உயிரை ஈந்து நீ செய்த நற்காரியங்கள்..
மழுங்கிய ஆயுதத்தால் சிதைக்கப்படுவதை ஏற்க முடிந்தால்..

கூட்டத்தில் பேசியதை செயலினில் காட்டிடவும்
ராஜபாட்டையில் நடப்பினும் எளிமையாய் இருக்க முடிந்தால்..

பகைவரும் நண்பரும் உன்னை மதித்திடும்
மாண்புடன் அளவுடன் நீ இருக்க முடிந்தால் ..

உலகம் உன் கையினில் ..
அளவிட முடியா வகையினில்..
மனிதனாய் சிறப்பாய்..
என் அன்பு மகனே!



Translation of a part of the famous poem " IF " by Rudyard Kipling:

If you can keep your head when all about you
Are losing theirs and blaming it on you;
If you can trust yourself when all men doubt you,
But make allowance for their doubting too:
If you can wait and not be tired by waiting,
Or, being lied about, don't deal in lies,
Or being hated don't give way to hating,
And yet don't look too good, nor talk too wise;

If you can dream---and not make dreams your master;
If you can think---and not make thoughts your aim,
If you can meet with Triumph and Disaster
And treat those two impostors just the same:.
If you can bear to hear the truth you've spoken
Twisted by knaves to make a trap for fools,
Or watch the things you gave your life to, broken,
And stoop and build'em up with worn-out tools;


If you can talk with crowds and keep your virtue,
Or walk with Kings---nor lose the common touch,
If neither foes nor loving friends can hurt you,
If all men count with you, but none too much:
If you can fill the unforgiving minute
With sixty seconds' worth of distance run,
Yours is the Earth and everything that's in it,
And---which is more---you'll be a Man, my son!

எழுதியவர் : கருணா (21-Apr-15, 3:05 pm)
பார்வை : 313

மேலே