மழையென்பது யாதென-கருணா

உப்பு விற்க
வெளியில் சென்றவனை
எதிர் பார்த்தா..
பெய்தது..மழை..?
அதற்கு ஏன் இந்த வசவு?
..
உப்பு விற்கப் போனா
மழை பெய்யுது .. என்று!

*******
சின்ன குழந்தைகள்
கை நீட்டி அழைக்கையில்
சேர்ந்து விளையாடத்தானே ..
பெய்தது மழை..?
அதற்கு ஏன் இந்தப் பழி?
..
மழையினால் வந்தது
நோய் என்று!

*******
இந்த சாதிக்கு இன்று..
அந்த சாதிக்கு இல்லை..
என்றா பெய்தது
மழை?
அதற்கு ஏன் இன்னும்
வெறி வரவில்லை..?

*******
நல்லார் ஒருவர் உளரேல்
எல்லார்க்கும் தானே
பெய்கிறது மழை.?
பின் எதற்கு ..
பருவத்தில் வரவில்லை
என்று தீயோர் பேசும் நிலை?

*******
ஏரி.. குளம்..
அடர்ந்த வனம்..
எங்கும் ஆக்கிரமித்து
எல்லாம் அழித்து..
அழிகின்ற மனிதனுக்கு..
அவ்வப்போது கூட
பெய்கிறதே மழை..?
..
தனக்கிழைத்த
கொடுமை மறந்து!
*******

எப்போதும் குறை
என்னிடத்தில் இல்லை..
பிறர் இடம்தான்
என்று சொல்லிப் பழகியதால்
வந்த வினை..!

பழி ஏற்று..
அழுகின்றது..
மழை..!

இதில்...
யாருடையது..
பிழை?


DISCLAIMER:

இந்த படைப்பிற்கு காரணம்.. நானல்ல..
நண்பர் "கனா காண்பவன்..தாகு" அவர்களின்
உந்துதலே..

S.கருணாநிதி

எழுதியவர் : கருணா (21-Apr-15, 5:13 pm)
பார்வை : 167

சிறந்த கவிதைகள்

மேலே