வெப்பம் தணிய

குளிரும் மழையும் பனியும்
அள்ளித் தந்த சுகமான நாட்கள்
போதும் என்று சொல்ல முடியவில்லை
இன்னும் இன்னும் இப்படியே இருந்து விட
வேண்டும் என்றே நினைத்தோம்
ஆனால் சூரியக் கதிர்கள் தன் காலம்
கோடைக் காலம் என மார்தட்டிக் கிளம்பி
வெப்பத்தை அள்ளித் தரத் தொடங்கி விட்டது
அதை தடுக்க யாராலும் முடியாது
மரங்களின் நிழல்களில் காற்றாட நின்றாலும்
மீண்டும் வெய்யிலில் மனிதன்,
மனிதனின் வேதனை புரிந்து
மேகக் கூட்டங்கள் சூரியனை மறைத்து
மந்தார நிழல் தருமே
அந்த மேகங்கள் தரும் நிழலில் சிறிது தூரம் நடந்து
மீண்டும் நிழலில் ஒதுங்கி மனிதன் படும் அவஸ்தை
கொஞ்சமல்ல வீடுகளில் முடங்கினால்
தடைப் படுமே வேலைகள்
குளிர்சாதனப் பெட்டிகள் இல்லாத வீடுகளில்
மக்கள் புழுங்கி வெதும்பி அப்பப்பா சொல்ல முடியவில்லை
கோடையில் வெப்பம் குறைக்க
மழை ஒன்றினால் மட்டுமே முடியும்
அந்த மழை கொட்டித் தீர்க்க வர வேண்டும்
மனிதன் எத்துணை சாகசங்கள் சாதனைகள்
சோதனைகள் வெற்றிகள் கண்டாலும்
வெப்பத்தை தணிக்க ஆராய வேண்டும்
மனிதனால் முடியாதது எதுவும் இல்லை
இதுவும் அவன் கைக்குள் ஓர் நாள்

எழுதியவர் : பாத்திமா மலர் (21-Apr-15, 3:30 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 95

மேலே