என்னே
என்னே...?
அட்சைய -
திரிதி யன்று....
அலைந்தலைந்து
தங்கம் வாங்கிட...
ஆஸ்தி சேருமென்று
தன் -
காரியமாக....
வியாபார -
தந்திரமாக்கியே....
நம்மை -
மடமையால்
தரித்திராக்கிடும்...
இத் திருநாள்....!
அன்று -
அரிசி..! மஞ்சள்...!
மலர்கள்..! கலந்த....
அட்சதை கொண்டு
ஆண்டவனை -
ஆராதித்து.....
ஆன்றோரிடம்
ஆசிபெறும்....
அற்புத ஆரியர்
திரு நாள்....!
இன்றோ -
காசு பணம்
பண்ணும்....
வர்த்தக -
நாளானது
என்னே...?