அன்பு ~ காதல் !!!


இறவாத எண்ணத்தின் இசை கூடும் - அன்பு

பிரியாத உள்ளத்தில் அசைபோடும் - என்றும்

தணியாத ஆசைக்கு அணை போடும் - உந்தன்

பரிவான சொல்லுக்கு உயிர் வாழும் - கண்கள்

அழையாமல் இதயங்கள் நிதம் வாடும் - இன்பம்

இழையாத உண்மைக்கு உயிர் போகும் - பெண்மை

விழியாத உறவுக்கு பலியாக...ும் - அன்மை

அழியாமல் அளவில்லா அன்பைத்தான் நாடும்

எழுதியவர் : (5-May-11, 12:14 am)
சேர்த்தது : யுவராஜ் சீ
பார்வை : 546

மேலே