அகப்படாத கவிதை

சுண்டல் கூட
விற்றுத் தீரும்
இந்தக்
கடற்கரைக் கண்காட்சியில்
எங்காவது மணல்களுக்குள்
மறைந்து
கிடக்கக் கூடும் -
இது வரை
என் கவிதைகளுக்குள் அகப்படாது
இனி நான் எழுதப்போகும்
இன்னொரு கவிதைக்கான
கூலாங்கற்கள் .

எழுதியவர் : பாலா (23-Apr-15, 7:30 pm)
பார்வை : 141

மேலே