அவள் ஒரு பேசும் நிலா

அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
அவளது முகம் மலர்ந்தது
அவளது நெஞ்சம் மலர்ந்தது
அவளது எண்ணங்கள் புலப்பட்டன
அவள் யாதொன்றும் சொல்லவில்லை - எனக்கு
இருந்தும் என்னுடன் அவள் கோபமில்லை தாபமில்லை

மாற்றான் வீட்டு மல்லிகைக்கும் மணம் உண்டென்பதை
உணர வைத்தவள் அவள்
இல்லை இல்லை - எமது வீட்டு மல்லிகைக்கும் வாசம்
உண்டென்பதை உணர வைத்தவளும் அவளே தான்

என்றும் நிழல் ஆடும் அவளது எண்ணங்கள்
என் மனமதில் ரணமாய் நிலைத்திருக்கும்
அவள் ஒரு மஞ்சள் வெஜில்
அவள் ஒரு இளங் சூரியன்
அவள் ஒரு அழகிய தேவதை
அவள் ஒரு உச்சத் தாரகை
என் மனங் கவர்ந்த என்னவள் ஒரு
வளரும் நிலா......................................

எழுதியவர் : புரந்தர (23-Apr-15, 7:35 pm)
சேர்த்தது : puranthara
Tanglish : aval oru pesum nila
பார்வை : 131

மேலே