மழையென்பது யாதென
மழையென்பது யாதென
என்னவளின் முதல் சந்திப்பில்
எண்ணில் அடங்கா ஆசையுடன்
ஏரிக்கரையில் காத்திருந்த -அன்றும்
கால தேவனுக்கும்
வான் தேவனுக்கும் -ஏற்பட்ட
கருத்து வேறுபாட்டிற்கு -பின்பும்
வான் தேவனின் ஆசிர்வதங்களை
வசீகரமற்று பார்க்கும் என் மனம்
பிரசவத்திற்கு மனைவியுடன்
மருத்துவமனை வளாகத்தில்
பூத்தூவலாய் -இன்றும்
இம்முறை வான் தேவன் பொய்க்கவில்லை
வாழ்வில் ஒளி ஏற்றிட்டான்
அன்றிலிருந்து
மழையை ஒதுக்கிட முடியாது
பல நேரங்களில் வாழ்வின் வழிகாட்டியாய்
ஆசீர்வாதத்தின் அடையாளமாய்
நாளைய வெற்றிக்கு அத்தாட்சியாய்
மா மழையை பார்கின்
நம்பிக்கை துளிர்க்கட்டும் நம்மில்
மழை மாற்றும்
மழை கொடுக்கும்
மழை வாழ்விக்கும்
மழை குளிர்விக்கும்
மழை சிலிர்ப்பூட்டும்
மழை ரசிக்க தூண்டும்
சிவ.ஜெயஸ்ரீ
குறிப்பு
நன்றி தாகு
உங்கள் தலைப்பை சொதப்பியதற்கு மன்னிக்கவும்