மழையென்பது யாதென

இன்று மழை உண்டு
என்று ராணிமுத்து காலண்டரில்
குறிப்பிட்டிருந்தால்
அன்று வருணன் கண்திறக்க
தலை காட்டுவாள் மாரி ....!!

கொட்டுமென ரமணன் சொல்லி
கல்விக்கூடங்களுக்கு
விடுப்பளித்தால் ...
சொட்டும் விழாது
வானம் வெளுத்து
காட்டும் வேடிக்கை ....!!

மறவாமல் குடை கொண்டுபோனால்
குடை நனைக்க மனமின்றி
வராது வான்மழை ...!
வராதென்ற நம்பிக்கையில்
எடுக்காது போனால்
மேனி நனைத்து மழை விளையாடும் ....!!

மழையென்பது யாதெனக் கேட்டால்
பெய்யும் என்பார் பொய்க்கும்
சிந்தும் என்பார் சிரிக்கும்
அடிக்கும் என்பார் எரிக்கும்
விழாது என்பார் விளாசும்
பொழியாதென்பார் பொத்துக்கிட்டு ஊத்தும் ...!!

நனைந்தால் மெய்சிலிர்க்கும்
நினைத்தால் மனமினிக்கும்
பனிமழை புதுசுகம்
பார்த்தாலே பரவசம்
கோடைமழை குளிர்விக்கும்
குதூகலத்தில் உளம்பூக்கும் ....!!

எழுதியவர் : ராஜ லட்சுமி (23-Apr-15, 11:56 pm)
பார்வை : 164

சிறந்த கவிதைகள்

மேலே