இறந்துவிடுவேனடி

உன் காந்தப்பார்வைகள்
தானடி- என்னை
காதல்செய்ய வைத்தது
கவிதை எழுத வைத்தது
பனியிலும் நடந்து நடந்து - உன்
பாசம் கண்டு மகிழ வைத்தது

ஓர் நாள்
உன் இதய அறைக்குள்
நுழைந்து பார்த்தபோது தான்
எனக்கு தெரிந்தது
உன் இதய அறைக்குள்
பல அறைகள் இருப்பது..

அதில் ஒவ்வொரு
அறையிலும் - என்
படத்தை மாட்டி வைத்தது
என்னை வியக்க வைத்தது
அதிலும் ஒரு அறையை
கருவறையாக்கி என்னையே
கடவுளாக்கினாய்
நீ பக்தனாகினாய்

அன்று தொட்டு
இன்று வரை
உன் இதயமே
என் பூமியாகிவிட்டது
ஆதலால் தான் என்னால்
மானிடம் வாழும் - வெளி
உலகத்தை பார்க்க முடியவில்லை
உனக்குள்ளே தான் பார்க்கமுடிகிறது

இன்று
நீ காதல்
கோலத்தை எனக்காய்
போட்டு விட்டாய்
அதனால்
நீ ஒரு கணமேனும்
காற்றாக மாறிவிடாதே

ஏனென்றால்
என் காதல்கோலம்
அழிந்தால் நான்
பூமியில் இறக்கமாட்டேன் - உன்
இதயத்துக்குள்ளே தான்
இறந்துவிடுவேனடி

எழுதியவர் : உடுவையூர் த.தர்ஷன் (5-May-11, 8:48 am)
பார்வை : 302

மேலே