உன் கால்தடம்

கடற்கரையில் ஓர் நாள்- உன்
கால்தடம் கண்டேன்
உன் கால்தடம் பார்த்து
ஒருகணம் நின்றேன்

உன் கால்தடம் பேசியது
என்மேல் கொண்ட
உன் காதலை....
சிலகணம் திகைத்து நின்றேன்
'கால்தடங்களும் பேசுமா?
காதலுக்காக என்று"....

இன்று
உன் கால்தடத்தின் பார்வைகள்
என்னை ஓவியனாக்கியதடி
உன் கால்தடத்தின் வார்த்தைகள்
என்னை கவிஞனாக்கியதடி

ஆதலால்
உன்னை ஒன்று கேட்கிறேன்
என் மரணம்
உன் மடியில் இல்லாவிடினும்
உன் கால்தடத்திலாவது
இருக்க வேண்டும்

அப்போதாவது
என் மேனி புனிதமடைந்து
என் ஆவி சொர்க்கம் செல்லுமடி....

எழுதியவர் : உடுவையூர் த.தர்ஷன் (5-May-11, 8:49 am)
பார்வை : 318

மேலே