என் வாழ்வே உன்னிடமே
உன் நிழலில்
என் பாதையென்று
ஊருக்கும் தெரியுமடி.
உன் உயிரில்
என் இதயமென்று
உனக்கும் தெரியுமடி.
நாளும் உன் நினைவுகள்
கொண்டே - என்
உயிரை வளர்க்கின்றேனடி.
வாழ்வும் உனக்கென்று
சொல்லி - என்
காலம் செல்கிறதடி.
நிலவே!
உன் புன்னகையை
கண்ட பின்பு தான்
இறைவன் பூக்களை
படைத்தானா?
மலரே!
நானும்
உன் வதனம்
உன் மௌனம்
கண்ட பின்பு தான்
கவிஞனானேனா?
உயிரே!
உன்னை கண்டதிலிருந்து
உன்னை எண்ணி
கவிதை எழுதாத
இரவுகளை-நான்
இதுவரை
கண்டதில்லை-நான்
இறக்கும் வரைக்கும்
கவிதை எழுதிக்கொண்டே
இருப்பேனென்று
என் இதயம் சொல்லுதடி
உன் நினைவுகளோடு....