ஏற்காதடி

நீ தேவலோகத்தில்
இருக்கப்பட வேண்டிய பெண்ணடி.
ஆனால்
இறைவன் உன்னை
படைக்கும் போது
ஒருகணம் மறந்ததனால் தானடி
நீ பூலோகத்தில்
இருக்கின்றாயடி.

தேவலோகம்
உன் அழகைக்கண்டு
உன்னை அழைத்தபோதும்
என் மேல் கொண்ட
காதலால் நீ பூமியை விட்டு
பிரியவில்லை.

ஆயிரம் ஆடவர் உன்னை
பார்த்த போதும்
நீ என்னை தான் பார்த்தாயடி.
அதனால்
உன் கண்கள் பேசும்
ஒவ்வொரு கவிதையையும்

என் காதல் புத்தகத்தின்
ஒவ்வொரு பக்கத்திலும்
எழுதி வைக்கின்றேனடி.
அத்தோடு
வேறொரு காதலையும்
என் இதயம் ஏற்காதடி.

எழுதியவர் : உடுவையூர் த.தர்ஷன் (5-May-11, 8:51 am)
பார்வை : 275

மேலே