நிழல்களும் காதலிக்கும்

பல நாட்களாய்
நானும் நீயும்
நடந்து சென்ற வேளை
உன் நிழலும்
என் நிழலும்
நம் பின்னே
நடந்து வந்தன.

அதில்
உன் நிழல் பிரிந்து வந்து
எனக்கு பின்னும்
என் நிழல் பிரிந்து வந்து
உனக்கு பின்னும்
எமை தொடர்ந்தன.

சில நாட்களாய்
எம் நிழல்கள்
எமைக்கேட்டன
“உங்களை பிரிந்து
நாமும் காதலிக்கலாமா” என்று….

அதற்கு
நாமும் சம்மதித்தோம்.
ஓர் நாள்;
நானும் நீயும்
நடந்து சென்ற வேளை
எம் நிழல்களை காணவில்லை
காரணம்-எம்
காதலைக்கண்ட நிழல்கள்
தாமும் காதல் செய்ய
எமைப்பிரிந்தன.

இன்று
உனக்கும் நிழலில்லை
எனக்கும் நிழலில்லை
நாம் நிழல்களற்ற
மனிதராகி விட்டோம்.
ஏய் பெண்ணே !
நிழல்களும் காதலிக்கும் என்று
உன்னை காதலித்த பின்பு தான்
கற்றுக்கொண்டேனடி.

உண்மைக்காதலரின் நிழல்கள்
எப்போதும் பேசும், காதலிக்கும்.
ஆதலால்
மானிடனே !
நீயும் காதலித்துப்பார்
உன் நிழலும் பேசும் காதலிக்கும்.

எழுதியவர் : உடுவையூர் த.தர்ஷன் (5-May-11, 8:52 am)
பார்வை : 329

மேலே