நாட்குறிப்பேடு...

நாள் தோறும்
நான் எழுதும்
நாட்குறிப்பேட்டில்
உன் முகவரி கண்டே
எழுதுகின்றேன்.

ஒவ்வொரு ஆண்டின்
என் நாட்குறிப்பேட்டில்
உன் பெயரே
முதலெலுத்து.

உன் நினைவலைகள்
வீசும் நாட்குறிப்பேட்டில்
என் கவிதைகளும்
வலம் வருகின்றது.

உன் நினைவுகள் அறியாத
நாட்குறிப்பேட்டை
இதுவரை நான் எழுதியதுமில்லை
இனியும் நான் எழுதப்போவதுமில்லை.

எழுதியவர் : உடுவையூர் த.தர்ஷன் (5-May-11, 8:52 am)
பார்வை : 268

மேலே