மௌனம் ...
உன் மேல் உயிர் கொண்ட
காதலினால், என்னை மறந்தேன்
என் சிந்தை களைந்தேன்...
உன்னை காணாமல் புசிக்கவும்
வெறுக்கிறேன் தனி
மரமாய் ஏங்குகிறேன்...
என்னுள்
ஒர் பறவை கூடுகட்ட வாராதா...
என் தனிமையீன் தவிப்பினை
உன்னிடம் தூது சொல்லாதா...
கண்மணியே வாராயோ - என்
காதலினை ஏற்க மாட்டாயோ...
பதில் ஏதும் கூறாமல்
மௌனத்தால் என்னை சிதைகாதே...
உயிர் காதலினை மண்ணில் புதைக்காதே...