விட்டுக்கொடுத்தல்

விதை தன் வெற்றியை
செடி என ஆர்ப்பரித்து சொன்னது

செடி தன் வெற்றியை
இலை என ஆட்டமிட்டு சொன்னது

இலை தன் வெற்றியை
பூ என புன்னகையிட்டு சொன்னது

பூ தன் வெற்றியை
காய் என கர்வமாக சொன்னது

காய் தன் வெற்றியை
கனி என இனிமையாக சொன்னது

கனி தன் வெற்றியை
விதை என விரும்பிச் சொன்னது

விதை இப்பொழுது
மண்ணில் தன்னை மாயித்து
மண் விட்டுக் கொடுத்தது
என அனைவருக்கும் சொன்னது

எழுதியவர் : வெங்கடேசன் (24-Apr-15, 12:45 pm)
சேர்த்தது : வெங்கடேசன்
பார்வை : 1450

சிறந்த கவிதைகள்

மேலே