விவசாய் வாழ்ந்தால் நாமும் வாழ்வோம்

மேகம் கை கோர்த்து
மின்னல் சிரித்து
இடி அதிர்வுற்று
மயில் குடை விரித்து
வானம் கண் கலங்கினால் தான்
விவசாயினுடைய கண்ணிர் துடைக்கப்படும்.

மரம் வெட்டுகிறோம்
மறந்து விடாதே
நமக்கு நாமே குழி வெட்டுகிறோம் என்று

இன்று
மழைக்கு வழிவகுக்கும் மரத்தை வேரோடும்
உணவுக்கு விதை விதைக்கும் மனிதனை உயிரோடும் கொல்கிறாய்
நாளை
காலை உணவுக்கு என்ன செய்வாய் மானிடா ?

நம்மால் இயன்றதை செய்வோம்
மரம் வளர்ப்போம்
மழைக்கு வழி வகுப்போம்
விவசாயின் கண்ணீரை துடைப்போம்.
நாட்டை வானவில் போல் வண்ணமுட்டுவோம்.

எழுதியவர் : jonesponseelan (24-Apr-15, 5:02 pm)
சேர்த்தது : ஜோன்ஸ் பொன்சீலன்
பார்வை : 548

மேலே