மரண தண்டனை வேண்டாம்
வெட்டி வெட்டி
மரங்களை வீழ்த்தினால்
ஒரு நாள் அவைகளும்
மஞ்சள் காகிதம் கொடுக்கும் !
வெள்ளை தாள் தயாரிக்க
வேலை நிறுத்தம் செய்யும் !
காகிதம் என்று சொல்லி
அதன் காற்று பை அறுக்கும் !
நம் அனைவருக்கும் !
வருங்காலத்தில் ஆக்சிஜன்
சிலிண்டர்கள் ரேசன்
கடையில் வாங்க நேரிடும் !
அதில் உன் ஆயுள் அளவு
குறிக்க கூடும் !
மனிதர்கள் வெட்டிய
நகங்களை விட மரங்கள்
எண்ணிக்கை அதிகம் !
அவைகள் வாழ்ந்த
இடத்தில தான்
நாம் அத்துமீறி நுழைந்து
ஆக்கிரமிப்பு செய்து
போலி பட்டா போட்டு !
பூமி ஒருநாள் உன் இடமா
என்று கேட்டால்
என்ன சொல்லுவோம் !
நாம் வேண்டாம் என்று
வெளியில் விடும்
நச்சு காற்றுகளை உப்பு சோப்பு போடாமல்
நிதமும்
அழுக்கு போக்கி !
நுரையீரல் உடுத்துவதற்கு
காற்றாடை கஞ்சி போட்டு
தருகிறது !
சலவை குறி இல்லை என்றாலும்
சாதி பார்க்காமல் அவரது
ஆடை அவரிடம்
ஒப்படைகிறது !
ஓசோன் ஓட்டை !
புவி வெப்பமாதல் !
அமில மழை!
பனிகரடிகள் பரிதவிப்பு
துருவங்கள் உருவம் தொலைக்க !
அறிவியல் பல விளைவுகளை
சொல்லுகிறது !
தொப்புள் கொடி என்று நினைத்து
வயிற்றை அறுப்பதை
நிறுத்துங்கள் !
வாரிசுகள் வளமாக வாழட்டும் !