காகம் வெள்ளை கொக்கு கருப்பு

காகம் வெள்ளை கொக்கு கருப்பு
பத்து ரூபாய் மற்றும்1௦௦ ரூபாய் நோட்டுகளை மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்ட பெட்டிக்கடை சுந்தரத்திற்கு சலவை நோட்டு ஆயிரத்தைப் பார்த்ததும் கண்களில் வங்கி ஒற்றிக்கொள்ள வேண்டும் போல இருந்தது.
. .” வெள்ளை சட்டை கையில சலவை நோட்டு எங்கயோ போகபோறப்பா நீ” என்றார் சுந்தரம். அதைக் கையில் வைத்து ஆட்க்கொண்டிருந்த எழிலுக்கு உண்மையிலேயே கை நடுங்கியது என்றே சொல்லலாம்.அந்த ஆயிரம் ரூபாய் நோட்டு அவன் கையை விட்டு பறந்தே போனது. அது பெட்டிக் கடை அருகில் அமர்ந்து பிச்சையெடுக்கும் பார்வையற்ற கண்ணப்பன் கையில் கிடைத்தது.
ரூபாய் நோட்டின் பின்னால் ஓடினான் எழில். அவன் எதிரில் நின்றான். நடப்பதை கவனித்தார் பெட்டிக்கடை சுந்தரம்.
ஆள்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் இடையில் அந்த ரூபாய் நோட்டை வைத்து அளந்தான் கண்ணப்பன். அது ஆயிரம் ரூபாய் நோட்டு என்பதை ஊகித்தான். மீண்டும் அதை நீளவாக்கில் வைத்து தடவிப் பார்த்தான் சட்டென அதை கசக்கினான் வீசி எறிந்தான்.
பெட்டிக்கடை சுந்தரத்திற்கு மூளையில் பிளாஷ் அடித்தது. செல்போனை எடுத்தான். தகவல் சொன்னான். வங்கியில மிஷின வச்சு கண்டுபிடிகறான் நம்ம பெட்டிக்கடை சுந்தரம் கண்ணப்பன வச்சு கண்டுபிடிச்சுட்டார். கள்ள நோட்டு மூட்டையை கைபற்றினார்கள். இல்லையென்றால் பெட்டிக்கடை சுந்தரம் தானே மாட்டிக்கவேண்டி இருக்கும். எமாற்று உலகத்தை நினைத்த சுந்தரம். “காகம் வெள்ளை கொக்கு கருப்பு” என்று மனசுகுள்ளேயே சொல்லிக்கொண்டார்
ராஜ்கவி. சி. அருள் ஜோசப் ராஜ்
3, மீனாச்சி நகர் ஆனைக்குப்பம்
கடலூர் 607 001
mobile : 9865480887

ராஜ்கவி . அருள் ஜோசப் ராஜ்

எழுதியவர் : ராஜ்கவி . (25-Apr-15, 9:06 am)
சேர்த்தது : rajkavi
பார்வை : 166

மேலே