முதல் சந்திப்பு
பூஜயில் நான் தொடும் பூவிதல் மேனியின்
கார் வண்ணத்தோகையின் கலந்தாடும் மல்லிகை
பொன் மொழி பேசிடும் பூங்குயில் தோரணை
கண் மலர் பூத்திட ஆடை மின்னும் அம்பிகை
சிகப்பு பௌர்ணமி நெற்றியில் சங்கமித்தது
சிந்திடும் புண்ணகை எனக்கு மட்டும் சொந்தமானது
சிந்தனை மறந்தது அவள் முகம் பார்த்ததும்
வந்தனை தூண்டுது அவள் கை தொட்டதும்
வன்னமே தோகையின் இடை நளினமே
அன்னமே அவள் போதை களஞ்சியமே
என்றுமே என் வாழ்க்கை தோரணமே
கள்ளமே இல்லாத கனியின் பால் மனமே
தாழம்பூ வண்ணத் தேகமே
தாம்பூலம் சிவந்த கண்ணமே
ஆலம்போல் படரும் பாசமே - அது
ஆடிட தூண்டும் ஊஞ்சலே
அஞ்சி அஞ்சி நடக்கும் அழகு பதுமை
அந்தி அந்தி பூக்கும் அல்லி புதுமை
மிஞ்சி மிஞ்சி கொளிக்கும் வெள்ளி சலங்கை
கொஞ்ச கொஞ்ச தூண்டும் அரிவுப் போதை