தமிழமுதம் கிடைத்திடுமோ உனக்கு - கருணா

நாடுங் கலைகளெலாம் நான்முகன் துணைவியினால்
பாடுங் கவிகளெலாம் ஞாலமிதில் - தேடுங்கண்
கிடைத் திடுமோதீந் தமிழமுதைப் பருகிடவே
படைத் தவனின்பாத மலர் !

.......

எனது வெண்பா முயற்சியிது...
இலக்கணம் கற்ற நட்புகள் , ... பெரியோர், கருத்து சொல்லித் திருத்தித்தர வேண்டுகிறேன்..
***********************************************************************************
Dr . வ.க. கன்னியப்பன் அவர்களின் வழிகாட்டுதல்:

நான்/முகன் துணைவியினால்
நேர்/நிரை - கூவிளம் விளம் முன் நேரசை வரவேண்டும். துணை என்பது நிரையசை.

தேடுங்கண் - தேமாங்காய்
காய் முன் நேரசை வரவேண்டும். கிடைத் திடுமோதீந் - கிடை (நிரையசை) என்ற ஓரசை வெண்பாவின் ஈற்றடி ஈற்றுச்சீரில்தான் வரும்.

கீழேயுள்ளது வெண்பா வடிவில் திருத்தி அமைக்கப்பட்டது.

இரு விகற்ப நேரிசை வெண்பா

நாடுங் கலைகளெலாம் நான்முகனின் இல்லாளால்
பாடுங் கவிகளெலாம் ஞாலமிதில் - தேடிக்
கிடைத்திடுமோ தீந்தமிழ்த் தெள்ளமுது; என்னே
படைத்தவனின் பாத மலர்!

எழுதியவர் : கருணா (26-Apr-15, 3:52 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 156

மேலே