உழைப்பு

உழைக்கா தவனின் உடைமைகள் எல்லாம்
ஒரு,நாள் எடுக்கப்படும்!
உழைப்ப வனுக்கே உரிமை என்றவன்
உணவும் கொடுக்கப்படும்!

உழைப்பே உயர்வென இயேசுவும் இங்கே
உரத்துச் சொல்லுகிறார்!
உத்தம நினைப்பை உண்மை உழைப்பை
உயர்த்திக் காட்டுகிறார்!

கடுமுழைப் பென்றும் கைமேல் பலன்தரும்;
காதல் மொழிகள் கசப்பினைக் குறைக்கும்;

உழைப்பின் மறுபெயர் அன்னை என்பது!
உன்வீட் டுள்ளே எரியும் விளக்கது!

ஞானம் அறிவொடும் திறமையாய் உழைத்தல்!
ஈனம் பிறரது உழைப்பினில் வாழ்தல்!

இருகை நிறைத்த உழைப்பினும் உன்னுள்
ஒருகை நிறைத்த அமைதியே உயர்வாம்!

உழைப்பின் உயர்வை உணர்த்தாச் செல்வம்
உன்சந் ததிக்கொரு கைப்பிடி காற்றே!

ஞானமும் பயிற்சியும் நிறைந்த நம் பிக்கை
வானமாய்ப் பயன்தரும் வளைச்சியும் நிலைக்கும்!

வெயிலில் நிழலாய் இரவில் நிலவாய்
செயலில் தூய உழைப்பும் பயன்தரும் !
======== ======
ஒருவாரம் நான் விடுப்பில் செல்கிறேன்
உழைப்பை உம்முன் விடுத்துச் செல்கிறேன்!

உழைப்பாளர்களுக்கு எனது மே தின வாழ்த்துக்கள்!.....

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (27-Apr-15, 7:40 am)
பார்வை : 1593

மேலே