என் வரிகளில் நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் பாட்டு வாத்தியார்

ம்ம்ம்ம்ம்ம் ...ம்ம்ம்ம்ம்ம் ...ம்ம்ம்ம்ம்ம் ...
ம்ம்ம்ம்ம்ம் ...ம்ம்ம்ம்ம்ம் ...ம்ம்ம்ம்ம்ம் ..

நீதானே இப்பாடல் வரிமாற காரணம்
உன் புகழை கொண்டாலே இப்பாடல் பரிபூரணம்

நீதானே இப்பாடல் வரிமாற காரணம்
உன் புகழை கொண்டாலே இப்பாடல் பரிபூரணம்
உனக்காக நானெழுதி சமர்ப்பிக்கும் அர்ப்பணம்
உனது சேவை தொடர்க
அது விருட்சம் போல வளர்க
உனது பெருமை பதிய
அது பிரபஞ்சமெங்கும் படர்க்க

அருவி போலவே வரி சொரிந்ததே
(கருவாய்) உன்னை கொண்டதாலே
இப்பாடல் என்னையே எழுத வைத்ததே
(குருவாய்) உன்னை கண்டதாலே

நல்ல கவிஞனாய் என்னை பார்க்கின்றேன்
உந்தன் காந்த கண்ணில்
நன்றி சொல்லியே இப்பாடலை சேர்க்கின்றேன்
இன்று உந்தன் கையில்

எந்தன் ஆசை தீருமோ
இந்த ஒற்றை பாடலில்
இன்னும் நூறு வேண்டுமே
உந்தன் கீர்த்தி பாடிட

இன்னும் நீ இன்னும் நீ
மின்னும் வண்ண பொன்னும் நீ
குறளை போல உந்தன் புகழை
போற்றும் உள்ளம் நான்

நீதானே இப்பாடல் வரிமாற காரணம்
உன் புகழை கொண்டாலே இப்பாடல் பரிபூரணம்
உனக்காக நானெழுதி சமர்ப்பிக்கும் அர்ப்பணம்

கவிஉலகமும் கவிஞர் உள்ளமும்
போற்றும் ஞானியே நீ
நற்கவியெழுதிடும் கனவு கொண்டோரை
ஏற்றும் ஏணியே நீ ...

அன்புதன்னையே கையில் ஏந்திடும்
ஆண்பால் - அன்னையே நீ ...
வெள்ளைத்தாடியை மெல்ல பூசிய
கவிக்குழந்தையே நீ ..

இந்த எழுத்து மேடையில்
இன்று பூத்த தேவனே
எந்த நாளும் மேன்மையில்
தமிழை ஏற்றும் சீவனே
(கவி)தந்தை நீ அல்லவா
இன்னும் நான் சொல்லவா
ஆண்டு நூறு வாழ்க நீயென
வாழ்த்தும் பிள்ளை நான் ....

நீதானே இப்பாடல் வரிமாற காரணம்
உன் புகழை கொண்டாலே இப்பாடல் பரிபூரணம்
உனக்காக நானெழுதி சமர்ப்பிக்கும் அர்ப்பணம்
உனது சேவை தொடர்க
அது விருட்சம் போல வளர்க
உனது பெருமை பதிய
அது பிரபஞ்சமெங்கும் படர்க்க


( நான் கவி எழுதிட பாதிக்காரணம் அவள் என்றால்
இவ்வகை பாடல் வரிமாற்றம் எழுதிட
ஆதிக்காரணம் ஐயா அகன் அவர்கள் .
அவர்தம் தொடர் ஆதரவும், ஊக்குவிப்பும் என்னை வெகு எளிதினில்
பாடல்களை எழுதிட செய்கின்றது என்றால் அது மிகையல்ல .
ஐயா அவகளின் பிறந்தநாள் தினத்தன்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்களோடு
இந்த எளியவனின் மிகச்சிறிய பரிசு .)

எழுதியவர் : ஆசை அஜீத் (28-Apr-15, 1:18 pm)
பார்வை : 549

மேலே