தேசத்தின் வறுமைக்கோடு

..."" தேசத்தின் வறுமைக்கோடு ""...
கொடியது கொடியது வறுமையே
கொடியது அதனினும் கொடியது
இளமையில் வறுமை ஒளவை
பாட்டி அழகாய் சொன்னால் !!!
பிச்சையெடுத்தேனும் படிக்க ஆசை
கிழிந்த துணியினை தைத்திடவே
நூலில்லை, காகிதநூல் தூக்கி நான்
பாடசாலை செல்வதும்மெப்படி !!!
மழலையின் முகமே மாறாத
பச்சிளங்குழந்தை பிச்சைக்காய்
தனது பிஞ்சுக்கரங்கள் ஏந்தியே
தெருவோரம் கெஞ்சி நடக்கிறார் !!!
யாசகம் கேட்கும் அரும்பு வாசகம்
உதாசீனம் செய்யாதே மனிதனே
உனக்குமில்லையா ஒரு குழந்தை
என்றே கேட்கும் கூறிய விழிகள் !!!
அழுக்கான முகத்தையும் அழகாக்கி
புகைப்படம் பிடிக்கவுன் அகம்காட்டி
உள்ளம்கொண்டு பூத்து சிரிக்கும்
உண்மை உலக அழகி நீதானம்மா !!!
வல்லரசு நோக்கி பயணம் செல்லும்
இவர் தேகத்தில் வேதனை கோடுகள்
என் தேசத்தின் வறுமை கோடுகள்
சாலைகளே இவர்களது வீடுகள் !!!
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...