எப்போதும் எனக்குள் என்னவளின் நினைவுகள்

அழகே உன் அழகில் ,என்னை மறந்தேனடி
உன் அனுமதியின்றி உள்ளம் அதிலே புகுந்தேனடி
இமைக்காது என் விழி உன்னை ரசிக்கின்றதே
நீ சிரித்தலோ எந்தன் நெஞ்சம் சிலிர்க்கின்றதே
.
நிலஉன்னை பார்த்த முதல்
என்நிலை நான் மறந்தேன்
என்னுள் நீ வந்தாய் .
உயிரதை உனக்கே தந்தேன்
.
உந்தன் பார்வைகளின்
அர்த்தம் கோடியடி
நித்தம் கொல்லுதடி
நீ தந்த முத்தமடி
.
அன்பே உன் அன்பில் ,நானும் உருகிப்போனேன்
உன் விரல் எனை தழுவும் போது கரைந்தேப்போனேன்
வாழாது எந்தன் ஜீவன் நீ இல்லாமல்
ஓர் நாளும் ஓயாதென் விழி உனை காணமல்
.
மலராய் நீயானால்
உன் வாசம் நானாவேன்
நதியாய் நீயானால்
பொழியும் மழையாவேன்
.
உன்னோடு வாழ்ந்திடவே
என் ஜென்மம் போததே
நீ காட்டும் அன்புக்கு
இணை எங்கேயும் கிடையாதே.
..
...

எழுதியவர் : கண்ணன் (29-Apr-15, 4:42 pm)
சேர்த்தது : ஆனந்த கண்ணன்
பார்வை : 770

மேலே