அவையும்

ஒரு கோட்டைக்குள்
உன்னைச் சிறை வைத்து
வட்டக் கோட்டைக் கிழித்து
அதில் பெருந்தீ வளர்த்து
வேட்டை நாய்களை
மதில்மேல் உலவவிட்டு
ஆழக்குழி வெட்டி
அகழி செய்து
அதில் முதலைகளை
உலவவிட்டிருக்கும்
உன் அப்பாவிடம் சொல்
அவையும் காதல் செய்கின்றன.

எழுதியவர் : சேயோன் யாழ்வேந்தன் (29-Apr-15, 4:43 pm)
Tanglish : avaium
பார்வை : 123

மேலே