இது தத்துவமல்ல

எனக்கில்லாததை
எனக்கிருப்பதாய்
நினைக்க சொல்லும்
மனமே ..

எனக்காகவா நீ..
உனக்காகவா நான்..
எதற்கு இந்த
சித்ரவதை?

இழுத்து எனை
முறையின்றி பேசச்
செய்கிறாய்..!

வலிந்து போய்
வம்பில் மாட்டி
விடுகிறாய்.. !

நானோ சிறியன்..
நீயெனைப் பெரியன்..
என்கிறாய்!

மூக்கை நீட்டியே
முழுதாய் உடைய
வைக்கிறாய்.!

எல்லாம் தெரிந்தவன்
என்றெனை நம்ப
வைக்கிறாய்!

அகந்தைக் கிழங்கினை
என்னுள் வளர்த்து
மகிழ்கிறாய்!

ச்சீ ..ச்சீ..
இது பிழைப்பா
என்கிறேன்..!

சும்மாக் கிட
என்றே சொல்லி
வளர்கிறேன்!

எப்போதும் எனக்கு
அடங்கி இருந்திடு
என்கிறேன்..!

உன்னை அறிந்திட
உதவி நீயென
அறிகிறேன்!

எழுதியவர் : கருணா (29-Apr-15, 6:20 pm)
பார்வை : 324

மேலே