வரலாற்று வர்ணங்கள் - 1 - தேன்மொழியன்

வரலாற்று வர்ணங்கள் - 1
~~~~~~~~~~~~~~~~~~~~

எழத் தூண்டும்
எந்திரத்தின் குரல்
எந்நேரத்திலும் ஒலிக்கும் ..
படுக்கைக்கு பக்கத்தில் ...

ஊடகம் உறங்காமல்
உள்வாங்கிய மின்சாரத்தை
உணர்வின்றி ஒளியாக்கும் ...

இரும்புக் கதவின்
கடவு சொற்கள் கருகியவாறு
ஏற்றத்தாழ்வு எரிந்திருக்கும் ...

மின்னணு தாள்கள்
உழைப்பின் உருவமென
கணக்கீட்டின் கர்வத்தில்
கழுத்தினை அறுத்திருக்கும் ...

நீலநிற நெகிழியாய்
அலமாரியில் அடுக்கிய
பறக்காத பறவைகளின்
வரலாறு வற்றி வெடித்திருக்கும் ...

நாகரிக தேடலில் ...

இறந்த பறவைகளின்
உதிர்ந்த இறகுகளும்
அகழ்வாராய்ச்சியில் அகப்படாமல்
ஆழத்தில் அழுகியிருக்கும்...

- தேன்மொழியன்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (29-Apr-15, 5:56 pm)
பார்வை : 382

மேலே