நட்பு பிரிவு

தொட்டு சென்ற தென்றலாய் நம்உறவு
விட்டு சென்று பிரிந்ததே நேற்றிரவு
விழி ஓரம் ஒரு துளியுடன்
நீ சென்ற போதும்
விடையில்லா வினாவாக
நான் நின்ற போதும்
எனக்கு சோகம் இல்லை
ஏனென்றால் சொல்லி அழுக நீயும் இல்லை...

எழுதியவர் : இராஜ்குமார் (29-Apr-15, 9:13 pm)
சேர்த்தது : இராஜ்குமார்
Tanglish : natpu pirivu
பார்வை : 199

மேலே