பயத்தில் இல்லை என் - பாரதம்

'' ப - யத்தில் இல்லை என் பா - ரதம் //

பாரதி ஆத்திகனாக இருந்ததாலோ என்னவோ அன்னை ,
பராசக்தியை வழிபட்டு வந்தார் -
பாரதி, ஆம்
பாரதியே
பணத்தைப் -
பற்றிய கவலையை கொடுக்காதே பின் நானும் இப் -
பாருக்குள்ளே நாத்திகனாகி விடுவேன் என்று ,
பராசக்தியை ,
பார்த்து வினாவிய ,
பாரதியா ,
பாதகம் ,
படைத்த யானையின் காலுக்கு ,
பலியானார் ,
பாவம் என்று சொல்வதா இல்லை ,
பராசக்தியை வணங்கியதால் உமக்கு கிடைத்த ,
பாடை என்று சொல்வதா - எனக்கு பிடித்தது நீங்கள் ,
படைத்த ,
பாரதம் மட்டுமே ,
பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் ,
பாரத நாடு என்று
பறைச்சாற்றிய
பாரதியின்
பாதத்திற்கு எனது
பணிவான வணக்கங்கள் ,
பாரதியே உம்மை நான் இங்கு ,
பகடக்காயாக்க விரும்பவில்லை உங்களது ,
படைப்புகளை மனித ,
பாதங்கள் - வாழ்க்கை ,
பாதையில் செலுத்தவில்லை
பதிலாக அழிவு ,
பாதையை நோக்கி ,
பாய்ந்துக் கொண்டிருக்கிறது ,
பயந்தும் செல்கிறது ,- நமது
பாரததேசம் ,
பறந்து கிடைக்கிறது ,
பாராமல் போவதற்கு உனது ,
பார்வைகள் எதற்கு ,
பரந்த மனம் கொண்ட மானிடா உனக்கு ,
பருமன் அளவு கூட ,
பரோபகாரம் செய்யாத உனது இரு -
பக்க கரங்கள் எதற்கு ,
பாராட்டுதலுக்குரிய ,
பரமாத்மாக்கள் தோன்றிய ,
பாரத் தேசத்தின் ,
பாமர மக்களும் வசிக்கின்ற ,
படசல் தேரோட்டம்டா இந்த ,
பாரதம் ,
பாமரன் என்பவன் செல்வத்தில் ,
பனை மரத்திற்கு மேல் வளர்ந்துவிட்டால் ,
பஞ்சம் என்ற சொல்லுக்கு இனி வாய் திறப்பானா ,
பகைவனை கண்டால் ,
பயம் கொள்ளலாகாது ,-
பாபா என உரைத்தான் ,
பாரதி ,
பயங்கர வாதிகளை ஒழித்துவிட்டால் ,
பசுமையை காணலாம் - நம்
பாரதத்தில் ,
பதட்டம் ,
பங்கம் ,
பயம் இது தவறு செய்யும் ,
பகைவனுக்கு உள்ள ஓர் ,
பக்க விளைவுகள் - கல்வியில் ,
படித்து வாங்கிய ,
பட்டம் இவனது ,
பஞ்சத்தை தீர்ப்பதற்கு ,
பயன்பட வில்லை - வானத்தில்
பறந்து கிடக்கும் காற்றில் ,
பறப்பதற்கு ,
பட்டத்தை போலது ,
பயன்படத் தொடங்கியது ,
பாம்பு என்றால் ,
படையும் நடுங்கும் என்பது ,
பழமொழி , - இந்தியராணுவப் ,
படை என்றால் ,
பாதகம் செய்ய நினைப்பவனும் ,
பயம் கொள்ளுவான் என்பது புதுமொழி ஆக்குக ,
பாவைக்கு தெரியாது எவன் நல்லவன் என்று ,
பறவைக்கு தெரியாது இது என்ன தேசம் என்று ,
பணத்திர்க்கி தெரியாது எவன் தர்மன் என்று ,
பருவத்திற்கு தெரியாது இதில் என்ன தவறு என்று ,
பசிக்குத் தெரியாது இது என்ன உணவு என்று ,
பகைவனுக்குத் தெரியாது எது நட்பு என்று ,
பஞ்சத்திற்கு தெரியாது எது செழுமை என்று ,
பயத்திற்கு தெரியாது எது தைரியம் என்று ,
பாசத்திற்கு தெரியாது எது வேசம் என்று ,
பாருக்குள் சாதிக்குத் தெரியாது எது ஒருமைப்பாடு என்று ,
பார்வைக்குத் தெரியாது எது தந்திரம் என்று ,
பாதைக்குத் தெரியாது எது நல்வழி என்று ,
பாம்புக்குத் தெரியாது எவன் தீண்டத்தகாதவன் என்று ,
பத்தினிக்கு தெரியாது எவள் தாசி என்று ,
படித்தவனுக்குத் தெரியாது நாம் கற்றது கையளவு என்று ,
பயிலாதவனுக்குத் தெரியாது கல்லாதது உலகளவு என்று ,
படித்தவர் ,
பயிலாதவர் எவராயினும் மனிதப் -
பண்புகளை வளர்த்துக்கொண்டால் நம் ,
பாரதத்தை தலைநிமிர்த்தி ,
பார்க்கலாம் ,
பயத்தைப் போக்கி வாழலாம் ///

எழுதியவர் : சிவகவி (29-Apr-15, 7:24 pm)
பார்வை : 138

மேலே