இரக்கமற்றத் தொலைப்பேசியே
பகலவன் மறையும் நேரத்தில் வரமாட்டேன் என்றேன் தாயிடம்
பிறகு சந்திக்கலாம் என்றேன் நண்பனிடம்
புகைக்கக்கும் இருசக்கர வாகனம் என்னிடம்
புதியப்பாடல்கள் அணிவகுத்தது என் தொலைபேசியிடம்
பலமுறை கேட்கத்துடிக்கும் என் செவியிடம்
பாடல் கேட்க உதவும் கருவியுடன்
பந்தம் ஒன்று உருவாக்கவேண்டும் என்றேன் என் இதயத்திடம்
புறப்பட்டேன் கல்லூரிக்கு விடையும் பெற்றேன் வெளி சத்தத்திடமிருந்து
மதிய உணவு வேண்டாம் என்றேன் தந்தையிடம்
மறக்காமல் சந்திப்பேன் என்றேன் காதலிடம்
மண் பாதச்சுவடை இரையாக்கினேன் மஞ்சள் வெயிலிடம்
மயங்கினேன் செவியில் கேட்கும் பாடலிடம்
மணிமேகலையின் குறுஞ்செய்தியை அவனிடம்
மோட்ற்ரோலா இசைத்து கட்டியது காதலிடம்
மறக்காமல் வந்து என்னை சந்தித்துவிடு என்ற செய்தியிடம்
ம்ம்ம் என்ற செய்தியை அனுப்பினேன் அவளிடம்
இருவரும் சந்தித்தனர்
இடைவெளி இல்லாத இடத்தில்
இன்னொரு உலகத்தில்
இரவின் அழைப்பை ஏற்றவனும்
இச்சையில் மயங்கியவனும்
இரக்கமற்ற தொலைப்பேசியால்
இன்னும் பதில் சொல்ல முடியவில்லை
இறைவனாகிய தாய் தந்தைக்கு .....................!