தொல்லைப்பேசி
இன்று
காலை எழுந்தவுடன் நண்பர்களுடன் குறுந்தவகல் பரிமாற்றம்
பெற்றோருக்கு ஒரு அழைப்பு சகோதருக்கு ஒரு அழைப்பு
மனைவி/காதலியுடன் ஓயாமல் தவகல் பரிமாற்றம்
இவை தான் இன்றைய தலைமுறையின் பாசபரிமாற்றம்
அன்று
பாசம் மனதில் அன்பு கண்ணில்
மாதம் அதிகபட்சம் ஒரு கடித பரிமாற்றம்
அன்று
கண்ணீரில் பிரிவின் வெளிப்பாடு
இன்று
தண்ணீரில் பிரிவின் வெளிப்பாடு
உன் நேரம் செலவிட தொலைப்பேசியால் பிறர் நேரம் வீண்ணடிக்காதே
பல காதலுக்கு கைப்பேசி தான் காரணம்
பல விவாகரத்திற்கும் கைப்பேசி தான் காரணம்
வெளி விளையாட்டு உடலை சீராக்கும்
கைப்பேசி விளையாட்டு நோயை உண்டாக்கும்
கவனத்துடன் பயணம் பிறரை காக்கும்
கைப்பேசியுடன் ஆபத்தை உண்டாக்கும்
அத்தியாவசிய தேவைக்கு தான் தொலைபேசி
தொலைப்பேசியை தொல்லைப்பெசியக்காதீர்
-இப்படிக்கு தொலைபேசியால் தொலைந்து போனவன்