மேக உலா
நீல வண்ண துகில் உடுத்தி
மேக உலா தவழ்கையிலே
வெள்ளை நிறம் ஆங்காங்கே
நீலத்துடன் கலந்து விட
ஆகாய மோகினிக்கு
ஆனந்தம் கோடி கொள்ள
பொறாமை கொண்ட கருப்பு வண்ணம்
கார் மேகமாக
அதனூடே கலந்து விட
கோபம் கொண்ட மோகினியோ
இடியோசை மின்னல் என மிரட்டி விட
கார்மேகம் கலைந்து கொள்ள
கார்மேகம் கொண்டுவந்த நீர் யாவும்
மழை நீராய் வெளியேற்றி
வந்த வேகம் தணியும் முன்னே
திரும்பியது நீராக
ஆகாயம் கொண்டவளோ
தன் வண்ணம் இயற்கை என்று
அழகு வண்ண ஆடை கொண்டு
வெளிர் நீல நிறத்தவளாய்
கம்பீரம் கலையாது காற்றோடு
காற்றாக கலந்து தான் உலவுகின்றாள்
அவளால் மட்டுமே இந்த மென்மை உலா
உலவிட முடியும் ,
மென்மை என்றால் மென்மை
பஞ்சு போன்ற மென்மை
அழகு ரதம் ஆகாய மார்க்கமதாய்
செல்வது போல் அவளின் உலா
என்றென்றும் வலம் வருமே