விவசாயி -கவிஞர் முஹம்மத் ஸர்பான்

ஏர் பிடித்து நிலம் உழுவ,
ஊர் கடந்து வயல் சென்றான்.
ஓர் மஞ்சப்பைக்குள் ஒன்டுரெண்டு சில்லரைக்காசுகளும்,
கூர்மையான நெல்லிலைகள் அறுக்கும் அரிவாளும்........,

மழை பெய்யும் பருவம் கோடையின் உஷ்ணம்,
சிரித்த நெல் மணிகள் வாடி கருகிப்போக,ஏரியை
தேடிச்சென்றால் அடுக்குமாளிகைகள்,மனத்தாகம்
தீர்க்க அருவியிடம் சென்றால் சுற்றுலா விடுதி.

காலத்தை நினைத்து தலையில் துண்டு போட்டு
குந்திருக்க,மனைவியிடமிருந்து மடல் வருகிறது.
தோட்டத்தில் பசுக்கன்று இறந்துவிட்டது,புழுங்கல்
அரிசி தீர்ந்து விட்டது,பிள்ளைக்கு பள்ளிக்கட்டணம் வேண்டுமென்று.......,

போட்ட முதலீடு மண்ணுக்கு போசாக்கு
ஊட்ட,விளைச்சல் கனவாகிப் போக,
வீட்டு வாசல் எவனோ! அழைக்க வட்டி கொடுத்தால்,
பெட்டிக்கடை முதலாளி முதலை சட்டையில் கைவைத்து கேட்பான்.

விதி எழுதும் கடவுள்
சதி நிறைந்த மாபெரும் எழுத்தாளன்.
வறுமையை மீண்டும் கொடுப்பான்,
அதில் தீ வைத்து ரசிப்பான்.

பூப்படைந்த பெண் பிள்ளை புகுந்த வீட்டுக்காய்
சீதனத்திற்கு காதிலொரு தொடுயில்லை,அலங்கரிக்க பட்டுச்சேலை
இல்லை.வருபவருக்கு தேனீர் கொடுக்க சர்க்கரை தீர்ந்து விட்டது,
அஞ்சி,அஞ்சி பொழுதை கழிக்கிறான் ஏழை விவசாயி........!!!!!!!!!!!!

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (2-May-15, 1:15 pm)
பார்வை : 265

மேலே