கனவு காணுங்கள்

கனவு காணுங்கள்
என்று சொன்னார் முன்னாள் ஜனாதிபதி
அப்துல்கலாம் அவர்கள்
அவரின் கனவு எத்தனையோ வழிகளில்,
நம் கனவு ஒரு சதவிகிதம் ஆவது
பலிக்கின்றதா இல்லை இல்லை
நம் கனவில் இலட்சியம் இல்லையே
இலட்சியம் தான் கனவு
தூங்கும் போது காணும் கனவு அல்ல
நாம் கொண்ட இலட்சியம் நிறைவேற
எண்ணம் கொள்வதும் நிறைவேற்ற
பாடுபடுவதும் நிறைவேற்றுவதும் தான்
அப்துல்கலாமின் கனவு காணுங்கள் என்றதன் பொருள்
அவரின் இந்த வார்த்தை நம் ஒவ்வொருவரின்
மனதிலும் ஆழமாகப் பதிந்த ஒன்றாகும்
இது சாதாரண வார்த்தை அல்ல
ஒவ்வொரு இளஞனையும் தட்டிக் கொடுக்கும்
உற்சாக வார்த்தை உறுதி மிக்க வார்த்தை
தட்டிக் கொடுக்க துணை நிற்க
வீரம் மிகுந்த இந்த அழகிய ஆற்றல் மிக்க
வார்த்தை சொல்லித் தரும் பாடம்
உன்னால் முடியும் உன்னால் முடியும்