நானும் அவனும்
நானும் அவனும்.....
திசையறியா வனத்தினில்
அடர்ந்த இலைகளின் ஓசையும்
கிடந்த சருகுகளின் ஓசையும்
போலே நானும் அவனும்...
பேசும் ஒலிகள் உண்டு
பேசிடாத ஒலியும் உண்டு
பேசிப்பேசியே களைத்ததும் உண்டு
பேசற்று நின்றதும் உண்டு ...
உள்ளம் பூரித்ததும்
உவகையுடன் இருந்ததும்
உருவம்போல் நிழலாட
ஊசித் தைத்த நெஞ்சாயின்று...
வெவ்வேறு திசைகளில்
வெற்று நினைப்புகளுடன்
வேறுவேறாய் போனோம்
வேடிக்கை பார்த்தபடியே...
- வைஷ்ணவ தேவி