தனிமை பயணம்
நீங்காத நினைவுகளை
இரவும் பகலுமாய்
உறவுகளோடு பேசிப்பேசி
மகிழ்வோடு வாங்கிக்கொண்டு..
சொந்தங்களையும் நட்புகளையும்
சந்தித்த இடங்களையும்
பேசிமகிழ்ந்த பொழுதுகளையும்
பொக்கிஷமாய் எடுத்துக்கொண்டு..
கொஞ்சிப்பேசும் மழலைகளின்
கள்ளமில்லா உலகத்தில்
கதைசொல்லி மகிழ்ந்து
அவர்களின் சிரிப்பில்
சிதறிய எண்ணற்ற
பாசத்தை ஒன்றுவிடாமல்
பொறுக்கிக்கொண்டு..
எல்லா நினைவுகளையும்
ஒவ்வொன்றாய் சரிபார்த்து
தனிமைப்பைக்குள் திணித்து
நெடுஞ்சாலை பேருந்தின்
சன்னலோர இருக்கையில்
சாவகாசமாய் அமர்ந்து
கோர்த்துவைத்த நினைவுகளை
ஒவ்வொன்றாய் அசைபோட்டபடி
இனம்புரியா ஏக்கத்துடனே
பயணிக்கிறது மனது..
#கோடைகாலங்களில்